முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் போல் தேங்கிய மழைநீர்:போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி:

புதன்கிழமை, 6 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தற்போது பெய்தமழையினால் அங்கு மழைநீர் வெள்ளமென தேங்கியுள்ளது.இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாதபடி போக்குவரத்து முடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருமங்கலத்திலிருந்து மேலக்கோட்டை வழியே கூடக்கோவில் செல்லும் சாலையில் முன்பு ரயில்வே கேட் இருந்தது.ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததாலும்,ரயில்வே கேட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டதாலும் அங்கு ரயில்வே கேட்டை எடுத்துவிட்டு ரயில்பாதையின் கீழே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கிவிடுவதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகி வந்தனர்.இதையடுத்து மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் ஆய்வு செய்த ரயில்வே பொறியாளர்கள் சுரங்கப்பாதையின் மேற்புரம் கூரையமைத்து மழைநீர் உள்ளே செல்வதை தடுத்திடும் திட்டத்தை வடிவமைத்தனர்.
இதையடுத்து சுமார் 35லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு நீண்டகால தாமதத்திற்கு பின்னர் ஒருவழியாக மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் பில்லர்கள் அமைத்து அதன்மேல் ஆங்கிள்கள் பொருத்தி மேற்கூரை அமைக்கபட்டது.இந்நிலையில்  திருமங்கலம் பகுதியில் பெய்யும் பலத்த மழையில் ரயில்வே பொறியாளர்களின் கணிப்பு தவறாகி சுரங்கப்பாதை முழுவதிலும் மழைநீர் வெள்ளமென தேங்கி வருகிறது.இதை தொடர்ந்து அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதையடுத்து சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை  ஊராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து வெளியேற்று வதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருமங்கலம் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையினால் மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கி கடல் போன்று காட்சியளிக்கிறது.
இதனால் அவ்வழியே கூடக்கோவில் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மேலக்கோட்டை, நடுக்கோட்டை,கீழக்கோட்டை, மைக்குடி,உலகாணி,கூடக்கோவில் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் சென்று திரும்புவதற்காக ஆபத்துமிகுந்த சாஸ்திரிபுரம் ஆளில்லா ரயில்வே கேட் வழியை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இன்னலை தீர்த்திடும் வகையில் மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கிடும் நிகழவிற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு மேலக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர் அழகர்சாமி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து