முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகாரில் காரில் முந்திச் சென்ற மாணவனை சுட்டுக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள்

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா: பிகாரில் கடந்த ஆண்டு காரில் சென்றபோது தன்னை முந்திச் சென்ற பள்ளி மாணவனை சுட்டுக் கொன்ற முக்கிய அரசியல்வாதியின் மகன் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் (31). இவர் தனது உறவினர் டெனி மற்றும் உதவியாளர் ராகேஷ் குமார் ரஞ்சன் ஆகியோருடன் கடந்த ஆண்டு ரேஞ்ச் ரோவர் காரில் பயணம் செய்தனர். அப்போது, ஒரு மாருதி ஸ்விப்ட் கார் முந்திச் செல்ல முயன்றுள்ளது. அந்தக் காரை ஆதித்யா சச்தேவா (17) ஓட்டி வந்துள்ளார்.

இதையடுத்து, அவர்களை எச்சரிப்பதற்காக ராக்கி யாதவ் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் காரை நிறுத்திவிட்டு ஆதித்யாவும் அவருடன் பயணம் செய்த நண்பர்களும் வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்களை தாக்கி உள்ளனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டதில் ஆதித்யா உயிரிழந்தார். அதன் பிறகு காணாமல் போன ஆதித்யாவின் உடல், 2 நாட்களுக்குப் பிறகு அவரது தந்தைக்கு சொந்தமான தொழிற்சாலை வளாகத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மனோரமா தேவி ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, இதுதொடர்பாக கயா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, ராக்கி யாதவ், டெனி, ராகேஷ் குமார் ரஞ்சன் ஆகிய மூவரும் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் குற்றச்சதியில் ஈடுபட்டதாகக் கூறி, ராக்கி யாதவின் தந்தையும் தொழிலதிபருமான பிந்தி யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து