முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே ஓட்டல் மோசடி வழக்கு: லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வே உணவகங்களை காண்ட்ராக்ட் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி லல்லுவுக்கும் அவரது மகனுக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி விலகினார். அதன் பின்னர் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது  கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வே உணவகங்களை தனியார் கம்பெனிகளுக்கு குத்தகைக்கு விட்டதில் ஊழல் நடந்ததாக லல்லு மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சுஜாதா ஓட்டலுக்கு சொந்தமாக பூரி மற்றும் ராஞ்சியில் உள்ள ஓட்டல்களுக்கு உணவகங்கள் குத்தகைக்கு விடப்பட்டு அதற்கு கைமாறாக விலை மதிப்புமிக்க 3 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் லல்லு பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்துப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த சி.பி.ஐ. ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி, முன்னாள் துணை முதல்வரும் மகனுமான தேஜஸ்வி,சர்லாகுப்தா, தனியார் ஓட்டல் நிர்வாக இயக்குனர்கள் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர்கள் மீது சி.பி.ஐ. கடந்த ஜூலை 7-ம் தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் வருகிற 11-ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி லல்லுவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. மறுநாள் தேஜஸ்வி ஆஜராகும்படியும் அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து