முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி பகுதியிலுள்ள அரசு பள்ளி மற்றும் அரசு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,- இராமநாதபுரம் மாவட்டம்  மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மேற்கொள்ளப்பபட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும்,ராமேசுவரம் பகுதியிலுள்ள பள்ளிகளையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மண்டபம்  முதல் ராமேசுவரம் பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும்,அரசு பள்ளிகளில் கல்வித்திறன் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக ராமேசுவரம் பகுதிக்கு வருகை தந்தார்.அதன் பின்னர் ராமேசுவரம் பகுதியிலுள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முகுந்தராயர்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தனுஷ்கோடி பகுதியிலுள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தாவுகாடு கிராமத்தில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் வருகைப் பதிவேடு, மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்பட சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உடைச்சியார்வலசை கிராமத்தில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தினையும், அதுபோல இருமேனி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குப்பானிவலசை தெற்கு ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும், ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக் கூடம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜா, இராமேஸ்வரம் வட்டாட்சியர் கணேசன், இராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் (பொ) திருமதி.தனலெட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து