முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அபு சலீம், கரிமுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், தாகீர் மெர்சண்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை விதித்தும் மும்பை தடா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

257 பேர் பலி

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணிநேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 100 பேரை குற்றவாளிகள் என்று மும்பை தடா கோர்ட்டு கடந்த 2007-ம் ஆண்டு அறிவித்தது.

7 பேர் கைது

இதில், குற்றவாளி யாகூப் மேமனுக்கு மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியபோது, குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட முஸ்தபா டோசா, நிழல் உலக தாதா அபுசலீம், கரிமுல்லா கான், பெரோஷ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் மற்றும் அப்துல் கயூம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

6 பேர் குற்றவாளிகள்

எனவே, அவர்கள் மீது தடா கோர்ட்டில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 16-ம் தேதி  தடா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில், தாதா அபுசலீம், முஸ்தபா டோசா, கரிமுல்லா கான், பெரோஷ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். அப்துல் கயூமுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அபு சலீமுக்கு ஆயுள்

இந்நிலையில், அபு சலீம் உள்ளிட்ட 5 பேர் மீதான இறுதி தண்டனை விவரத்தை வருகிற செப்டம்பர் 7-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என தடா நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அபு சலீம், கரிமுல்லா கான்  ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாகீர் மெர்சண்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து