முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பாரம்பரிய முறையில் நடவுப்பணிகள் தீவிரம்

வியாழக்கிழமை, 7 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி, சத்திரப்பட்டி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, பெரியகோட்டை, வடகாடு மலைப்பகுதிகள், தேவத்தூர், 16-புதூர், கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாணாவாரி மற்றும் தண்ணீர் பாய்ச்சல் நிலங்கள்; உள்ளன. இப்பகுதியில் மழை பெய்ததை தொடர்ந்து நடவுப்பணிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் மக்காச்சோளம், பருத்தி, உ@ந்து ஆகியவற்றை காளை மாடுகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏருக்கு கூலியாக ரூ.2 ஆயிரமும், விதைகள் நடவு செய்ய பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கூலியாக ரூ.250 கொடுக்கப்படுகிறது. தற்போது இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்தாண்டு மாணவாரி மற்றும் தண்ணீர் பாய்ச்சல் நிலங்களில் விதைப்பு பணிகள் வேகமாக தொடங்கி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை இதேபோன்று இருந்தால் இந்தண்டு அனைத்து விதமான பயிர்களும் நடவு செய்து, நல்ல லாபம் எடுக்கலாம் என விருப்பாட்சியைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன் கூறினார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து