முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்: புடின் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

விளாடிவாஸ்டாக்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை  தணிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவுரை கூறியுள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், விளாடிவாஸ்டாக் நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாக குற்றம்சாட்டி அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே வடகொரியா தனது தற்காப்புக்காக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இக்கட்டான இந்த நேரத்தில் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்.

வடகொரியாவுக்கு எழுந்துள்ள அச்சத்தை போக்க சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிக்க ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தென்கொரிய தலைநகர் சியோலில் முகாமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து