முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் வேளாங்கண்ணி மாதா கோவில் சப்பர பவனி -அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 8 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள வேளாங்கண்ணி மாதா திருக்கோவில் மின்தேர் பவனியை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீவேளாங்கண்ணி மாதா திருக்கோயிலில் 37ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாதா சொரூபம் தாங்கிய மின்தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த தேர் முக்கிய வீதிகளின் வழியே உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு தேர் மின் அலங்காரத்தால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இத்தேரினை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அப்பகுதி அ.தி.மு.க. செயலாளர் சேசு அனைவரையும் வரவேற்றார். மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை பேராலய தந்தை செல்வராஜ் அடிகள், மற்றும் துணை பங்குத்தந்தை வனத்துறை அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்பகுதி மக்களிடையே வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். வேளாங்கண்ணி மாதாவை வணங்கும் வகையில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட மாலையை கொண்டு வந்து வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வழங்கி ஆசீர்வாதம் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், சுரபி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து