முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளோரிடாவை நோக்கி நகரும் 'இர்மா புயல்' : அடைக்கலம் தேடி 50 லட்சம் பேர் இடப்பெயர்வு

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: கரீபியன் தீவுகளை தாக்கிவிட்டு அமெரிக்காவின் முக்கிய மாகாணமான புளோரிடாவை நோக்கி வருகிறது இர்மா புயல் காரணமாக பாதுகாப்பு இடம் தேடி 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

5-ம் வகை புயல்...
இர்மா புயல் 5 ஆம் வகையுடைய கடும் புயல் ஆகும். நாளை புளோரிடா மாகாணத்தை இப்புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடா தாக்கப்படுகிறதா என்பது பிரச்சினையில்லை, எப்படி தாக்கப்படுகிறது என்பதே பிரச்சினை என்றார் அதிகாரி ஒருவர்.  புயல் புளோரிடா மாகாணம் மட்டுமின்றி தென் அமெரிக்கா முழுவதையும் இப்புயல் தாக்குமா என்று தெரியவில்லை.

அடைக்கலம் தேடி...
புளோரிடா மாகாணத்தில் இந்திய அமெரிக்கர்கள் ஏராளமானவர்களும் வசிக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி வருகின்றனர் என்றார் அரசு அதிகாரி ஒருவர். அதிபர் டிரம்ப் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி மக்கள் நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து