முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்சாங் சூகியின் அமைதிக்கான நோபல் பரிசு திரும்ப பெறப்படாது நோபல் இன்ஸ்டிட்யூட் அறிவிப்பு

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

கோபன்ஹேகன்: மியான்மர் அரசியல் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங்சாங் சூகியின் நோபல் பரிசு திரும்ப பெறப்படாது என்று நோபல் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஒலவ் ஜோல்ஸ்டட் கூறினார்.

அமைதிக்கான நோபல்...
மியான்மர் அரசியல் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங்சாங் சூகி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியதால் 1991-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சமீபத்தில் மியான்மரில் ரோஹிங்யா முஸ்லி-ம் சிறுபான்மையினரை ராணுவமும், புத்த மதத்தை சேர்ந்த கும்பலும் துன்புறுத்தி வருகிறது. எனவே ஆங்சாங் சூகியின் நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்று 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் ஒரு வலைதளத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

விதி வகுக்கவில்லை
இதுகுறித்து நார்வே நாட்டை சேர்ந்த நோபல் இன்ஸ்டிட்யூட் தலைவர் ஒலவ் ஜோல்ஸ்டட் கூறும்போது, “நோபல் பரிசின் நிறுவனர் ஆல்பிரட் நோபலோ அல்லது நோபல் அறக்கட்டளையோ பரிசு வழங்கப்பட்டவர்களின் கவுரவத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளை வகுக்கவில்லை. எனவே நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டவரிடம் இருந்து அந்த பரிசை பறிக்க முடியாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து