முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 லட்சமாக உயர்ந்தது வங்காள தேசத்திற்குள் நுழைந்த ரோஹிங்கியாக்களின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபை தகவல்

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

காக்ஸ்பசார் (வங்காளதேசம்): கிட்டத்தட்ட 3,00,000 ரோஹிங்கியாக்கள் இதுவரை வங்காளதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று ஐநா சபை கூறியுள்ளது. ஒவ்வொருநாளும் சுமார் 20,000 பேர் வங்காளதேசத்திற்குள் வருகின்றனர்.

புகலிடம் இல்லை
ஐநா அகதிகள் அதிகாரி ஒருவர் சமீபத்திய கலவரங்களைத் தொடர்ந்து உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று கூறினார். பெரும்பாலானோர் கால் நடையாகவோ, ஆற்றில் படகுகள் மூலமாகவோ வங்காளத்திற்குள் நுழைகின்றனர். இதில் ஏராளமானவர்களுக்கு எவ்விதமான புகலிடமும் இல்லை. அவர்கள் பருவ மழையில் சிக்கிக்கொண்டுள்ளனர். மியான்மாரில் தாங்கள் ராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும், கொல்லப்பட்டும் வருவதாக ரோஹிங்கியாக்கள் தெரிவிக்கின்றனர்.

குடியுரிமை மறுப்பு
ரோஹிங்கியாக்கள் தங்கள் நாட்டவர் கிடையாது என்கிறது புத்தமதத்தவர் அதிகம் வாழும் மியான்மர் தேசம். அவர்கள் மியான்மரில் தலைமுறைகளாக வாழ்ந்து வந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து