முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன கருத்தரங்கில் பங்கேற்க கேரள அமைச்சரை அனுமதிக்க வேண்டும் - பிரதமருக்கு பினராயி விஜயன் அவசரக் கடிதம்

சனிக்கிழமை, 9 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை சீனாவில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றுகேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

சுற்றுலா கருத்தரங்கு

ஐக்கிய நாட்டு சபையின் கீழ் செயல்படும் உலக சுற்றுலா அமைப்பின் சார்பில் சீனாவில் நாளை முதல் 16-ம் தேதி வரை சுற்றுலா கருத்தரங்கு நடக்கிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி கேட்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பினார்.

அனுமதிக்கவில்லை

ஆனால் மத்திய அரசு, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சீனா செல்ல அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பான கடிதம் மத்திய வெளியுறவுத் துறையில் இருந்து கேரள அரசிற்கு வந்தது. அனுமதி மறுக்கப்பட்டதற்கான முறையான விளக்கம் எதுவும் அந்த கடிதத்தில் கூறப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அவசரக் கடிதம்...

இதற்கிடையே அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனை சீனாவில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து