முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒன் ஹார்ட்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர்.ஆர்.ரகுமான், நடிகை -- Select --, இயக்குனர்- Select Director ,,இசை-ஏ.ஆர்.ரகுமான், ஓளிப்பதிவு - ஒன் ஹார்ட் என்னும் பெயரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

தமிழில் இப்படியொரு படம் வருவது இதுவே முதல்முறை.ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து ஒரே படமாக உருவாக்கி இருக்கிறார்.

 87 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான சிறந்த பாடல்களை தேர்வு செய்து அதை ஒரு தொகுப்பாக பாடியிருக்கிறார்கள்.ஏ.ஆர்.ரகுமான், மேடையில் பாடியிருப்பதைக் பார்த்திருக்கிறோம்.

ஒரு லைவ்வான இசை நிகழ்ச்சியை அவர் எப்படி ஒருங்கிணைத்து நடத்துவதை நேரில் பார்த்து ரசித்திருக்கலாம். ஆனால், ஒரு இசை நிகழ்ச்சிக்கு முன் எப்படி தயாராக வேண்டும்.

ஒரு இசையை உருவாக்க தன் குழுவினருடன் எடுத்த முயற்சி. இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார் என்கிற பின்னணி குறித்தோ அவரின் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை அனைத்தையும் இப்படத்தில் பார்க்கலாம்.

மேலும் இசைக் குழுவினர் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பேசுவதும், தன்னுடைய குழுவினர்களைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துக் கொள்ளுவதும் இதில் சிறப்பான அம்சம். இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை அப்படியே பாடாமல், சில புது இசைகளை புகுத்தி மிகவும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் எப்படியெல்லாம் இசையை கொடுக்கலாம் என்று விவரித்தும் இருக்கிறார். குறிப்பாக ஒரு சிறு கருவியை கணிணியுடன் இணைத்து அதில் இசை வரவைக்கும் காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது.இது ஒரு திரைப்படமா அல்லது கதையாக இருக்கும் என்று நினைத்து போனால் ஏமாற்றம்.

இது ஒரு புதுவிதமான அனுபவம் என்றே சொல்லலாம். இசைக்கு அடிமையாகாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லலாம். குறிப்பாக இசைப் பிரியர்கள், ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு அடிமையானவர்கள் அனைவருக்கும் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கும்.அவருடைய லைவ் கான்சர்ட் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது.

துள்ளியமான இசை, சிறு கருவிகளிலும் இசை, என இசையின் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார். டால்மி அட்மாஸ் தொழில் நுட்பத்துடன் உள்ள திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தால் இப்படத்திற்காக இவர் எடுத்த நுட்பமான முயற்சியை மிகவும் ரசிக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த புதுமையான முயற்சிக்கு பெரிய பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.மொத்தத்தில் ‘ஒன் ஹார்ட்’ புதிய அனுபவம்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து