முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது அபியும் அனுவும்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் டோவினோ தாமஸ் - பியா பாஜ்பாய் நடிப்பில் புதுமையான காதல் படமாக உருவாகியிருக்கும் 'அபியும் அனுவும்' படத்தின் முன்னோட்டம்.

'சரிகம இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் சினிமா பேனரான யொட்லி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் 'அபியும் அனுவும்'.
இப்படத்தில் மலையாளத்தில் வளர்ந்து நாயகர்களுள் ஒருவரான டோவினோ தாமஸ் நாயகனாகவும், பியா பாஜ்பாய் நாயகியாகவும், நடித்துள்ளனர்.

சுஹாசினி, பிரபு, ரோகினி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியிருக்கிறார். தரன் இசையமைத்திருக்கிறார்.சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே.

காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும், காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த வகையில் ஒரு முழு காதல் படமாக உருவாகியிருக்கும் படம் 'அபியும் அனுவும்',

இது ஒரு புதுமையான, சொல்லப்படாத காதல் கதையாக அமையும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.முருகதாஸ்-ம், டீசரை ஜெயம் ரவியும் வெளியிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து