முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மீது மின்காந்த அலை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங் : அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் மீது மின் காந்த அலை (எலெக்ட்ரோ மேக்னடிக்) தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் அமெரிக்கா மீது மின் காந்த அலை தாக்குதலை நடத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சக்தி குறைந்த ஹைட்ரஜன் குண்டை தரையில் இருந்து 30 கி.மீ. முதல் 400 கி.மீ. உயரத்தில் வெடிக்கச் செய்தால் பல ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு மின் காந்த அலைகள் எழும். இதன்மூலம் அமெரிக்காவின் 75 சதவீத மின் விநியோகத்தை தடை செய்ய முடியும். கணினிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் அனைத்தும் முடங்கும். தொலைத்தொடர்பு முற்றிலும் தடைபடும். இவற்றை சீர் செய்ய பல மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.

இந்த அபாயகரமான மின் காந்த அலை தாக்குதலை நடத்த ஏவுகணைகள் தேவையில்லை. சாதாரண ஹீலியம் பலூனில் ஹைட்ரஜன் குண்டை பொருத்தி வெடிக்கச் செய்தாலே போதும். தென்கொரியா, ஜப்பான் மீதும் இதேவகையான தாக்குதலை நடத்த வடகொரியா வியூகம் வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து