முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய படையை ஹெலிகாப்டர் சேவையில் ஈடுபடுத்த மத்திய அரசு பரிசீலனை - அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஹெலிகாப்டர் சேவையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர்களை ஈடுபடுத்தவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு அங்கு 4 நாள் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனந்த்நாக் நகரில் நடந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் தேவையான இடத்தில் ராணுவ வீரர்களை உடனடியாக கொண்டு செல்ல மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர்களை ஹெலிகாப்டர் சேவையில் ஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

ராணுவத்தில் பணியாற்றிவரும் வீரர்களுக்கு சலுகைகளை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. பணியின்போது வீரமரணம் அடையும் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர் குடும்பத்திற்கு நிதயுதவியை ரூ. ஒரு கோடி வரை உயர்த்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வீரமரணம் அடையும் மத்திய ஆயுத போலீஸ் படை வீரர் குடும்பத்திற்கு நிதியுதவியை ரூ.ஒரு கோடி வரை உயர்த்துவதே மத்திய அரசின் நோக்கமாகும் என்றும் கூறினார். வீரமரணம் அடையும் மத்திய ஆயுத படை போலீசார், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், திபெத்-இந்திய பாதுகாப்பு படையினர், எல்லைப்பாதுகாப்பு படையினர், தேசிய பாதுகாப்பு படையினர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.60 லட்சம் முதல் 70 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

வீரமரணமடையும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக பாரத் கீ வீரத் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. பாதுகாப்பு படையினரின் வீரதீரத்தை மத்திய அரசு ஊக்கவித்து வருகிறது. வீரதீரத்தை எந்த சந்தையிலும் இருந்து பெறமுடியாது. நீங்கள் இயற்கையாகவே வீரதீரமுள்ளவர்களாக பிறந்துள்ளீர்கள் என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து