முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பு நீக்கத்தினால் 1.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்: ப.சிதம்பரம்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி  :  பணமதிப்பு நீக்கத்தினால் ‘நன்மைகள்’ ஏற்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 1.5 லட்சம் பேர் வேலையிழந்ததாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம் அதற்காக கூறப்பட்ட ஆளும் அரசின் நோக்கங்கள், இலக்குகளைப் பூர்த்தி செய்யவில்லை, அது ஒரு முழு தோல்வி என்று கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அனைவரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக தரப்பில் அது வெற்றியே என்று தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரம் கூறியதாவது: பணமதிப்பு நீக்கம் தவறான நடவடிக்கை என்று மத்திய அரசு தைரியமாக அறிவிக்க வேண்டும். பணமதிப்பு நீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் தற்போதைய அறிக்கையை 6 மாதங்களுக்கு முன்னதாகவே கணித்து விட்டோம்.  பணமதிப்பு நீக்கத்தினால் 1.5 லட்சம் பேர் வேலையிழந்ததும், பொருளாதார வளர்ச்சி குறைந்தததுமே நிகழ்ந்துள்ளது, என்றார் ப.சிதம்பரம்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து