முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி அதிகாரிகள் 4 பேர் ஜார்க்கண்டில் கைது: ஊழல் வழக்கில் சி.பி.ஐ நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஞ்சி :  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வருமான வரித் துறை உயர் அதிகாரி மீதான ஊழல் புகாரை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், அத்துறை சார்ந்த மேலும் 4 அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வருமான வரித் துறை முதன்மை ஆணையர் மீது ஊழல் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த ஜூலை 10-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

குறிப்பாக குற்றச் சதி, லஞ்சம் வாங்கியது மற்றும் மோசமான நடத்தை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஜூலை 12-ம் தேதி முதன்மை ஆணையரை கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள சிபிஐ செய்தித்தொடர்பாளர் நேற்று கூறியதாவது:  ஜார்க்கண்ட் வருமான வரித் துறை முதன்மை ஆணையர் மீதான வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை கைது செய்துள்ளோம். இதில் ரஞ்சித் குமார் லால், சுனில் குமார் குப்தா ஆகிய இருவரும் ராஞ்சியிலும் தருண் ராய் கோடர்மா நகரிலும் வினோத் குமார் பால் ஹசாரிபாக் நகரிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 4 பேரும், கைது செய்யப்பட்ட வருமான வரித் துறை முதன்மை ஆணையருடன் இணைந்து, சில தொழிலதிபர்கள் கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவியுள்ளனர். இதற்கு பிரதிபலனாக தொழிலதிபர்களிடமிருந்து அவர்கள் பெருமளவு தொகையை லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 23 இடங்களில் (கொல்கத்தாவில் 18, ராஞ்சியில் 5) சோதனை நடைபெற்றது. இதில் சுமார் ரூ.3.7 கோடி ரொக்கம், 6.6 கிலோ தங்கம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து