முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிகளை இணைக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் அம்மா - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : நதிகளை இணைக்க  பல  முயற்சிகளை மேற்கொண்டவர்  மறைந்த முதல்வர் அம்மா ( ஜெயலலிதா) என்று சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

சென்னையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

நம் நாட்டின் நதிகள் மீட்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் ‘நதிகளை மீட்போம் - பாரதம் காப்போம்’ என்ற இயக்கம் தேசிய இயக்கமாக சத்குரு தலைமையில்கோயம்புத்தூர் முதல் புது டெல்லி வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெறும் இச்சீர்மிகு விழாவில் உங்களுடன் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமான மரங்களை நடுவதன் மூலம் நதிகளைப் பாதுகாப்பது, போன்ற பல்வேறு இயற்கையைப் பேணிக் காக்கும் நிகழ்வுகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். இதனால், அவர் நதிகளை இணைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து வந்தார்.  அதேபோன்று,  மாநில நதிகளை தேசிய மயமாக்கி, நதிகளின் நீர் ஆதாரத்தை உகந்த வகையில் உபயோகப்படுத்தப் பட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கோரிவந்தார்.  நதிகள் இணைப்பிற்காக நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புதிட்டம் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 34 ஆறுகள், 89 அணைகள் மற்றும் 14,098 பெரியஏரிகள் பொதுப்பணித் துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வளத்தினை பாதுகாக்கும்அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நீர்வளஆதாரங்களை சீரிய முறையில் மேம்படுத்துவதற்கான முக்கியமுயற்சியாக ‘குடிமராமத்து’ முறைக்குப் புத்துயிரூட்டி பங்கேற்பு அணுகுமுறையடன்  நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணிகள் தமிழ்நாட்டில்  நடைபெற்று வருகின்றன. 2016-2017 ஆம் ஆண்டில்1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கப்பட்டுள்ளன.

2017-2018 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2,065பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும், ஒரு சிறப்பு முயற்சியாக ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளைமண்ணை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம்செய்பவர்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தற்பொழுது செயலாக்கத்தில் உள்ளன. மேலும் மாநிலத்திலுள்ள அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் படிவுகளை  அகற்றி, அணைகளின்  திட்டமிடப்பட்ட கொள்ளளவினை  மீட்டெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நிலத்தடி நீரை செறிவூட்டவும் ஆறுகளிலிருந்து  ஏரிகளுக்குத் தண்ணீரை கொண்டு செல்லவும் புதிய தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுக்கள்  கட்டவும் ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் புதியதிட்டங்கள் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளன.

காவேரி ஆற்றின் கழிமுகப் பகுதிகளில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள அபாயத்தினை தணிப்பதற்கும்,அப்பகுதிகளில் உள்ள வடிகால்களை மேம்படுத்துவதற்கும், 1,560 கோடிரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தற்பொழுது செயலாக்கத்தில்  உள்ளது.மேலும், காவேரி வடிநிலத்தில் பாசன அமைப்புகளை 14,500 கோடிரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தின் கீழ்,கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்திற்கு 2,298 கோடியே 75 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நதிகள் இணைப்பிற்காக இதுவரை நடைபெற்ற 12 கூட்டங்களில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு அரசுவலியுறுத்தி வருகிறது. மேலும், இதனைப் பூர்த்தி செய்யும் வகையில், கங்கை சீரமைப்பு பணியினை மேற்கொள்வதை போன்று தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ் நதிகள் இணைப்பு திட்டங்கள்செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்,மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு -பாலாறு - காவேரி - வைகை - குண்டாறு இணைப்பிற்கான விரிவானதிட்ட அறிக்கை மேலும் காலதாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும்என்றும், நதிகள் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள அதிகாரத்தின் மூலம் ஒருசட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு துரிதமாகசெயல்திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.

பிரதமரை 27.02.2017 அன்று நான்சந்தித்து பன்மாநில நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளேன். மேலும், 24.05.2017 அன்று நான் எழுதியுள்ள கடிதத்தில் பம்பா -அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கான இசைவினைவழங்க கேரள அரசுக்கு உரிய அறிவுரை வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். தமிழ்நாட்டில் காவேரி ஆற்றிலிருந்து தண்ணீரை வைகை மற்றும்குண்டாற்றிற்கு கொண்டு செல்ல உரிய நதிகள் இணைப்பை ஏற்படுத்தும் பொருட்டு காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் மாயனூர் என்ற இடத்தில் புதிய கதவணை 254 கோடியே 45 இலட்சம்ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் மாநில அரசின் நிதிஆதாரங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாகஇக்கதவணையின் மேற்பகுதியிலிருந்து புதிய கால்வாய் அமைத்து காவேரி ஆற்றின் வெள்ள நீரை அக்னியாறு, தெற்கு வெள்ளாறு,மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் மிகை நீரை காளிங்கராயன்அணைக்கட்டிலிருந்து நீரேற்று முறையில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளம்குட்டைகளை நிரப்பும் திட்டமாக அத்திகடவு – அவிநாசி திட்டம் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட  உள்ளது. இதன் மூலம் ஈரோடு,திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள30 பொதுப்பணித்துறை ஏரிகள், 41 ஒன்றிய ஏரிகள் மற்றும் 630 குளம்குட்டைகள் பயன்பெறும் .நீர்வளங்களுக்கு ஆதாரமாக உள்ள காடுகளையும், மரங்களையும்பேணிப் பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமைப் போர்வையினைமேம்படுத்தவும், மரங்களின் பயன்பாட்டினை நீட்டிக்கவும் வனங்களுக்குஉள்ளேயும், வெளியேயும், 7.55 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வனவளங்கள் பாதுகாக்கப்பட்டு, பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 2012-13 முதல் ஒவ்வொரு ஆண்டும் மாபெரும்மரம் நடவுத் திட்டத்தின் கீழ் இதுவரை 3.99 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு மரங்களின் அடர்த்தியை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24-ஆம்தேதியன்று தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைவளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்ததை மகிழ்ச்சியுடன் இங்குநினைவு கூர விரும்புகிறேன்.

மேலும், காப்பு வனப்பகுதிகளுக்கு வெளியே மரங்களடர்ந்தபரப்பினை அதிகரித்தல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மண் அரிப்பைதடுத்தல் ஆகியவற்றினை நோக்கங்களாகக் கொண்டு ஆற்றுப்படுகைகளில் 14,335 எக்டேர் பரப்பளவில் தேக்குமரத் தோட்டங்கள்எழுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் இயற்கையாக சந்தன மரங்கள் வளரும்மாவட்டங்களான வேலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருச்சி  மாவட்டங்களில் சந்தனமரங்களை மறுஉற்பத்தி செய்யும் திட்டம்ரூ.100.00 கோடி செலவில், 2016-17-ஆம் ஆண்டு முதல்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 12.12.2016 அன்று வார்தா புயல் காரணமாக சென்னை மாநகரம்மற்றும் அதனைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியமாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடுசாய்ந்தன. இழந்த பசுமைப் போர்வையினை மீட்டெடுக்கும் பொருட்டுசென்னை, காஞ்சிபுரம் மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ. 13.42 கோடி செலவில் மரக்கன்றுகள்நடப்பட்டு வருகின்றது.

வனப்பகுதிகளில் உயிர்ப்பன்மையினைஅதிகரிக்கவும், வைகை மற்றும் நொய்யல் நீர்வடிப்பகுதிகளில் தொடர்நீர் வரத்தினை அதிகரிக்கவும் ரூ.24.58 கோடி மதிப்பீட்டில் வைகைமற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் ஊட்டுதல் எனும் புதிய திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் தமிழகஅரசின் சீரிய கவனத்தில் உள்ளது என்பதைத் தெரிவித்து மேலும்,மரியாதைக்குரிய ஈஷா யோகா மையத்தை சார்ந்த சத்குருவின் நதிகளை மீட்போம் என்ற இயக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுமிகவும் பாராட்டுக்குரியதாகும். நீர் மிக மிக இன்றியமையாதது.மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்திற்கும் நீரின்தேவை மிக முக்கியமானதாகும். அரசு புறம்போக்கு நிலங்களில் எங்கெங்கே இந்த ஈஷா யோகா மையத்தை சார்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட முன்வந்தால், அதற்கான அனைத்து உதவிகளையும்இந்த அரசு செய்யும். .சத்குரு எந்த நோக்கத்திற்காகஇந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அந்த இயக்கம் வெற்றி பெற நாம்அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு  அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து