முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் சுவாமிகள் இயற்றிய பயன் தரும் பதிகங்கள் புத்தகங்களாக மதுரையில் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை, - மதுரையில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாம்பன் சுவாமிகள் இயற்றிய பயன் தரும் பதிகங்கள் புத்தகங்களாக வெளியிடப்பட்டது.
 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு என்று அடியார்களால் போற்றப்படும் பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானை நினைத்து 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய ஒவ்வொரு பாடல்களிலும் பல்வேறு பயன்களுக்கு ஏற்றபடி பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களை பாடி அதன்மூலம் அதற்குரிய பலன்களை ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். இதனையொட்டி பாம்பன் சுவாமிகளின் இயற்றிய பயன்தரும் பாடல்களை புத்தக வடிவில் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடைபெற்றது.
         முன்னதாக பாம்பன் சுவாமிகள் திருவுருவ படத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சென்னை பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சமாதி நிலைய நித்தியப் பாராயண குழுவினரின் பாராயணமும்,  பாம்பன் சுவாமிகள் இயற்றிய பாடல்களை ஓதுவாமூர்த்திகள் திருத்தணி சுவாமிநாதன், கரூர் சுவாமிநாதன், பழநி வெங்கடேசன், மதுரை முத்துக்குமரன், கரிவலம் வந்தநல்லூர் சுந்தர், சிவகாசி ரமேஷ் ஆகியோர் இசை ஆராதனை நடத்தினர்.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் டி.சூரியமூர்த்தி, செந்தமிழ் அரசு பொறியாளர் சிவக்குமார், மீனாட்சி அரசுக்கல்லூரி பேராசிரியர் சு.சந்திரா ஆகியோர் பாம்பன் சுவாமிகளின் பற்றிய சொற்பொழிவினை ஆற்றினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் பாம்பன் சுவாமிகளின் பயன்தரும் பதிகங்களை புத்தகங்களாக வெளியிட்டார். அதனை திருஞானம், நாகநாதன், பாலசுப்பிரமணி,ஈஸ்வரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாம்பன் சுவாமிகளின் விழாக்குழு நிர்வாகிகள் மகாதேஜா மண்டல சபை தலைவர் செ.வே.சதாநந்தன், மகாதேஜா மண்டல செயற்குழு உறுப்பினர் டி.தயாளன், ஞானத்திரள் மாத இதழ் ஆசிரியர் கி.சிவக்குமார்,ஆர்.பி.யோகிஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து