முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் சிவஞானம் தலைமையில் வடகிழக்கு பருவமழை -2017யை முன்னிட்டு கலந்தாய்வு கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை -2017யை முன்னிட்டு அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள்,  ண மண்டபங்கள்  மற்றும்  தொண்டு நிறுவனங்களுக்கான கலந்தாய்வு  கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
விருதுநகர் மாவட்டம்  வடகிழக்கு பருவமழை -2017 காலமானது அக்டோபர்  மாதம்  தொடங்க உள்ளது. இந்த பருவத்தில், மழைப் பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே  விருதுநகர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள்,  ண மண்டபங்கள்  மற்றும்  தொண்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின்  உரிமையாளர்கள்  தங்கள் கட்டிடத்தின்  உறுதித் தன்மையை உறுதி செய்யும்படியும், கட்டிடங்களின் மொட்டை மாடி மற்றும் வளாகத்தில் உள்ள காலியிடங்களில்  மழைநீர் தேங்காத வண்ணம் முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வளாகத்திற்குள் கட்டிடத்தின் அருகிலோ அல்லது மின்சாரம் செல்லும் வயரின் அருகிலோ ஆபத்தான நிலையில் மரக்கிளைகள் செல்லும் பட்சத்தில், உரிய அனுமதி பெற்று அகற்றி வேண்டும் என்றும்,   கட்டிட   வளாகத்தில்  இடியும் நிலையில்  உள்ள   பழைய கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்தும்படியும், அவசர காலங்களில் மக்கள் வெளியேறுவதற்கு  அவசர வழிகள் உபயோகப்படுத்தும் நிலையில் உள்ளனவா  என்பதையும் உறுதிசெய்து கொள்ளும்படியும்,
மேலும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் தடையின்றி அளிக்க, போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மின் ஆக்கி(ஜெனரேட்டர்), ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதிசெய்து, தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், மேலும் கட்டிடங்களில் பொறுத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் நல்ல நிலையில் உள்ளதா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும், பேரிடர் காலங்களில்  அவசரத்தன்மைக் கொண்டு  ண மண்டபங்களிலோ, பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களிலோ பொதுமக்கள் தங்கிக்   கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும், கண்மாய் கரைகளோ மற்றும் கட்டிடங்களோ ஆபத்தான நிலையில் இருக்கும் பட்சத்தில் அவசர மைய கட்டணமில்;லா இலவச தொலைபேசி எண்-1077யை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  கேட்டுக் கொண்டார்கள். 
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)  அன்புநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள்   தி.செல்வி (அருப்புக்கோட்டை),  கதிரவன் (சிவகாசி),  மங்களராமசுப்பிரமணியன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து