மழை பெய்வதால் உற்பத்தி அதிகரிப்பு - குறைந்துவரும் காய்கறி விலைகள்

ஞாயிற்றுக்கிழமை, 10 செப்டம்பர் 2017      தமிழகம்
decrease vegetable prize 2017 9 10

சென்னை : தென் மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறி உற்பத்தி அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக காய்கறி விலை குறைந்து வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை உயர்ந்திருந்தது. இதனால் வியாபாரம் குறைந்து, மந்த நிலை நிலவியது. இந்நிலையில், இந்த ஆண்டு தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த இரு மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர்  9-ம் தேதி வரை 34 செமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 48 சதவீதம் அதிகம். அதன் காரணமாக தென் மாநிலங்களில் காய்கறி விளைச்சல் அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.


கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் விலை ரூ.7 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.50-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.15 ஆகவும், ரூ.25-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.12 ஆகவும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.17 ஆகவும், ரூ.25-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.15 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.10 ஆகவும் வீழ்ச்சி அடைந் துள்ளது.

மேலும் தக்காளி ரூ.25, வெங்காயம் ரூ.26, சாம்பார் வெங்காயம் ரூ.90, கத்தரிக்காய் ரூ.25, உருளைக் கிழங்கு ரூ.14, முள்ளங்கி ரூ.18, பாகற்காய் ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.9, பீட்ரூட் ரூ.20, முருங்கைக்காய் ரூ.28-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்க செயலர் கூறியபோது, தற்போது நல்ல மழை பெய்து வருவதால், விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை, அவரை, புடலங்காய் போன்றவை அதிக அளவில் விளைந்துள்ளன. மேலும் ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பீன்ஸும் அதிக விளைச்சல் அடைந்துள்ளது. ஊட்டியில் கேரட் அதிக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்து, அவற்றின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து