முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் போராட்டத்தை விமர்சிக்கும் பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும்: ராகவா லாரன்ஸ்

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை விமர்சிக்கும் பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாயுடன் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் கோவில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ கூடாது.நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பா.ஜ.க. விமர்சிக்கிறது. பா.ஜ.க.விற்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நடிகர்கள் பலரும் ஆதரவளித்தனர்.அதேபோல், நடிகர் ராகவா லாரன்சும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அது மட்டுமின்றி மெரினாவில் நடந்த போராட்டத்திலும் அவர் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகர் லாரன்ஸ் தனது ஆதரவை மீண்டும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து