தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தமிழகம்
rain tn-pdy 2017 9 11

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கூடலூரில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. குன்னூரில் 9 செ.மீ., பெரம்பலூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து