முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகாடு - பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் குறைந்தளவே தண்ணீர் தேக்கம்

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு மலைப்பகுதியின் மேற்குதொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்தேக்க உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 ஆகும். இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாடவங்களைச் சேர்ந்த 2323 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஆறு குளங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி முக்கிய நீராதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. தற்போது இதன் நீர் பிடிப்பு பகுதிகளான புலிக்குத்திக்காடு, பெத்தேல்புரம், பெரியூர், சிறுவாட்டுக்காடு, வடகாடு, கண்ணணூர், தட்டைப்குழிக்காடு ஆகிய பகுதிகளில் போதியளவு மழை பெய்யாததால் அணை நிறம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரப்பலாறு அணையில் 49 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 5 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை. இந்தாண்டும், பரப்பலாறு அணையை தூர்வாராததால் அணையின் முழு கொள்ளவை சேமிக்க முடியாமல் போனது. வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் அணை முழுவதும் நிறம்பும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து