முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட எட்டு பேர் கைது.பட்டாக்கத்திகள் நகைகள் பறிமுதல்.

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

 கம்பம்,- தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
 கம்பம் நகரில் கடந்த சில தினங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகிறது.இது குறித்த புகா£ரின் பேரில் கம்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை இரவு பகலாக வலை வீசி தேடி வந்தனர்.இந்நிலையில் குற்றம் நடந்த 14 மணி நேரத்தில் எட்டு பேரை கைது செய்து ஜந்துஅடி நீள பட்டாக்கத்திகள், 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.கம்பம் தெற்கு போலீஸ் நிலையம் அருகே கடந்த செப் 8ம் தேதி இரவு கம்பத்தைச் சேர்ந்த செல்லத்தாய் (55)என்ற மூதாட்டி நடந்து சென்றார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த3 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.இதே போல் கம்பம் வேலப்பர் கோவில் தெரு,மணி நகரம்,பாரதியார் நகர் உள்ளிட்ட தெருக்களில் நடந்துசென்ற பெண்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் செயினை பறித்துச் சென்றனர்.மேலும் செப் 9 ல் அதி காலை 5.30 மணியளவில் கம்பம் போலீஸ் குடியிருப்பு அருகில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டா கத்திகளை காண்பித்து மிரட்டி தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.கம்பம்  நகரில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களால் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் கம்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன்
தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் இரவு பகலாக தீவிர ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டனர்.இதில் மதுரை பசும் பொன் நகர்புல்லட் மணி (23)மதுரை ஆண்டாள் கொட்டடாரம் ஆசாரி மணி (35) அகோரா கார்த்திக்(25)கம்பம் புதுப்பட்டி குருவி மணிகண்டன்(27)கம்பம் பாரதியார்நகரைச் சேர்ந்த ராம்குர் (24) பிரசாந்த் (20) விக்னேஷ்(20) பாண்டீஸ்வரன்(20) உள்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மிகவும் வித்திசமான ஜந்தடி நீளமுள்ள 2 கத்திகள்,4 பட்டா கத்திகள்,9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பாதிக்கப்பட்டகம்பத்தைச் சேர்ந்த செல்லத்தாய் ,ராஜலட்சுமி புகாரில் பல்வேறு வழக்குகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த 14 மணி நேரத்தில்
குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.இது குறித்து போலீசார் கூறும் போது பெண்களைமிரட்டுவதற்காகவே வித்தியாசமான நீளமான பட்டாக் கத்திகளை வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.மேலும் மதுரையில் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.விசாரணையில் ஜெயலில் பழக்கம் ஏற்பட்டு அதன் பின் கம்பம் வந்து பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஓப்புக் கொண்டனர் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து