சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு: அ.தி.மு.க. பொதுக்குழு நடத்த தடையில்லை - வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தமிழகம்
highcourt chennai 2017 09 06

சென்னை : அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் தெரிவித்து வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பகலில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தனர்.

அனைவருக்கும் அழைப்பு

அ.தி.மு.க பொதுக்குழு செப். 12-ம் தேதி நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைப்பெற்று வந்தன. பொதுக்குழு உறுப்பினர்களும் சென்னைக்கு பயணமானார்கள்.


ஐகோர்ட்டில் வழக்கு

இதனிடையே, அ தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் சில நாட்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கடந்த 28.8.2017 அன்று பொதுக்குழு தொடர்பாக அனுப்பிய கடிதத்தில் அ தி.மு.க (அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா) என்று அணிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த அந்த கடிதத்தில், பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யார் என்று குறிப்பிடாமல் நிர்வாகி என்று தெரிவித்துள்ளனர். அதேபோல தற்போது பொதுச்செயலாளர் இல்லாத பட்சத்தில் துணை பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தில் அ தி.மு.க யாருக்கு சொந்தம் என்ற விவகாரம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பொதுக்குழு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. யாருக்கு என்ற விவகாரம் நிலுவையில் உள்ளபோது பொதுக்குழு கூட்டுவது சட்ட விரோதம். எனவே பொதுகுழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என வெற்றிவேல் எம்.எல்.ஏ அதில் கோரியிருந்தார். அவர் மனு மீதான விசாரணை 11ம் தேதி நடைபெறும் என்று ஐகோர்ட் அறிவித்தது.

ஒருவர் மட்டும் வந்தது ஏன்?

அதன்படி நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஏன் ஒரே ஒருவர் மட்டும் தடைகேட்டு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அக்கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் தடைகேட்டு அவர் வந்துள்ளார் எனக் கூறினார். அப்போது நீதிபதி, உங்கள் அணியும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளலாமே எனக்கேட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் இந்த கூட்டம் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்தனர். அதற்கு நீதிபதி, அப்படி அனுப்பப்பட்ட கடிதம் விதிகளுக்கு எதிரானது என்றால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாமே? என மீண்டும் கேட்டார்.

மேலும், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நீங்கள் அதை நிராகரித்துவிட்டு வீட்டில் இருக்கலாமே என்றும் கருத்து தெரிவித்தார். இதுபோல சட்டமன்ற உறுப்பினர் வழக்கு தொடர வேண்டும் என்றால், அது முதலில் தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது, ஆனால் அதை இந்த வழக்கில் கடைபிடிக்காமல், பொதுக்குழுவுக்கு தடை கோரி தனிப்பட்ட முறையிலேயே வெற்றிவேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கண்டனத்துக்குரியது

அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்படக்கூடிய மனுதாரர், தினகரனையே 4-வது எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். தனக்கு ஆதரவாக உள்ளவர்களை இதுபோல் எதிர்மனுதாரராக சேர்த்து விடுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று செய்வது வழக்கு, விசாரணையின் முக்கிய கட்டத்தை எட்டும்போது அதை திசை திருப்பும் நோக்கமாகும். இந்த செயல் கண்டனத்துக்குரியது, இதுபோன்று உள்நோக்கம் கொண்ட செயல்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் நீதிபதி கூறினார்.

ரூ.1 லட்சம் அபராதம்

பின்னர் நீதிபதி, வெற்றிவேலுக்கு மூன்று வாய்ப்புக்களை வழங்கினார். வெற்றிவேல் விருப்பப்பட்டால் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் அவருக்கு விருப்பம் இருந்தால் மதியம் சென்று உணவருந்திவிட்டு வரலாம் அதேபோல கூட்டத்துக்கு செல்ல விருப்பமில்லாவிட்டால் அவர் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, வீட்டிலேயே இருக்கலாம் என தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கார்த்திகேயன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கை தொடுத்த வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததோடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக சட்டப்படியான சுதந்திரம் உள்ளது எனவும் உத்தரவில் தெரிவித்தார்.

மேல்முறையீட்டு மனு

இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் எம்.எல்.ஏ நேற்றைய தினமே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரியும் தலைமை நீதிபதி அமர்வில் வெற்றிவேல் எம்.எல்.ஏ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

தடையில்லை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடைவிதிக்க மறுத்துவிட்டனர். பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். சிலர் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் அ.தி.மு.க.வினர் மும்முரமாக ஈடுபட தொடங்கிவிட்டனர். இதையொட்டி சென்னை வானகரம் பகுதி கலைகட்டியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ரெயில் !

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது. ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது. தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நௌலி ஆசனம்

நௌலியின் ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ தட்சிண நௌலி உறுதுணையாக இருக்கும்.

மாரடைப்பை தடுக்க...

இன்று, உலகில் அதிகமாகப் பயிரிடப்படும் உணவுப் பொருட்களில் 4-வது இடத்தில் இருக்கும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், போலிக் ஆசிட், கால்சியம், பைட்டோகெமிக்கல்ஸ், காப்பர், நியாசின் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மாரடைப்பு வருவதைத் தடுக்கும்.

ரோபோவுக்கு குடியுரிமை

உலகில் முதன்முறையாக, ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். பெண் போன்று பேசும் இந்த ரோபோட், கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது. இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

அதிகாலை எழுதல்

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், அதிகாலையிலேயே இவர்கள் உறக்கம் கலைந்து எழுவதால்  மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதில்லையாம். இவர்கள், சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுவதாக தெரிவித்துள்ளனர்.

வாழைப்பழ டயட்

வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. 12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

தோலின் முக்கியத்துவம்

மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் குறிப்காக, மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவதுதான் என்பது. முதலில் இந்த சோதனையை ஒரு சுண்டெலியின் மீது நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மூலம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.

நவீன கருவி ‘இலி’

மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட ‌இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன,‌ ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.

புதிய முயற்சி

பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. அப்போது, 245 பேர் இணைந்து ஒரே நேரத்தில் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கோப்பையின் மதிப்பு

கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது.

‘லைவ் லொகேஷன்’

பயனாளர்களுக்கு  இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியுமாம்.