முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுனர் உரிமம்: உயர் நீதிமன்றம் தடை

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  வாகனங்களை பதிவு செய்வோர், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வாகனம் வாங்குவோர், அதை பதிவு செய்யும்போது, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, வாகன விற்பனை முகவர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வாகனம் பதிவு செய்வோர், பெயரில் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் என்ற உத்தரவானது, தங்களைப் போன்று பழைய வாகனங்களை வாங்கும், விற்கும் தொழில் செய்து வருவோருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்திடும்.

எனவே, இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, போக்குவரத்து துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனு குறித்து நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து