ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடு கடத்தும் திட்டம் இதுவரை இல்லை: உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      இந்தியா
Kiren Rijiju 2017 9 12

புதுடெல்லி : ரோஹிங்கியா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படும் திட்டம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

மியான்மரிலிருந்து இந்தியாவை நோக்கி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.  இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு மனித உரிமை ஆணைய அமைப்புகள் மற்றும் ஐ. நா. சபை ஆகியவை வருத்தம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ விளக்கம் அளித்துள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் திட்டம் இல்லை. இந்தியா எப்போதும் மனிதாபிமான அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது.  - மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ

இதுகுறித்து அவர் கூறியபோது, "சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடு கடத்தும் திட்டம் இல்லை. இந்தியா எப்போதும் மனிதாபிமான அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து