முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் சம்பா மிளகாய் குறித்து ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 12 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்   விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க கலையரங்கத்தில் வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற சம்பா மிளகாய் சாகுபடி செய்தல், சாகுபடி பரப்பு அதிகரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்தல் மற்றும் விநியோக தொடர் அமைப்பு குறித்து, விவசாயிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில், வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர்   சிரு,   துவக்கி வைத்தார்கள்.
இக்கருத்தரங்கில் வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர் தெரிவித்ததாவது:-
மிளகாய் ஒரு பணப்பயிர் ஆகும். மிளகாய் பயிர் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர் வகையாகும்;. மிளகாய் இந்திய சமையலின் பிரிக்கமுடியாத அங்கமாகும். சிவப்பு மிளகாயில் வைட்டமின் யு மற்றும் ஊ சத்துக்கள் நிறைந்துள்ளது. ‘காப்சைசின்” என்பது மிளகாயின் காரத்தன்மை காரணியாகும். இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை உலக பிரசித்திப்பெற்றது. மிளகாய் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2009ஆம் ஆண்டில்; இந்தியாவின் மிளகாய் உற்பத்தி 1269.5 மெ.டன்கள் ஆகும்.
வேளாண்மையில் “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”; என்பது தமிழ்நாட்டின் முக்கிய கொள்கையாகும். பாரம்பரிய இரகங்களின் உற்பத்தியை பெருக்குவது, புதிய சாகுபடி தொழில் நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட அறுவடை பின் செய் நேர்த்தி முறைகள், விளைபொருளை முறையாக சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் ஆகியவை இக்கொள்கையை அடைய துணை புரியும். தமிழகத்தில் மிளகாய் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது. மிளகாய் வற்றல் வரத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், இராஜபாளையம், இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் கமுதி, திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஆகியவை முக்கிய மிளகாய்  வணிக மையங்களாகும்;. விவசாயிகள் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, விற்பனை வணிகத்தை உயர்த்தி, உணவு தொழிலில் அதிகரித்து வரும் மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி அதாவது மிளகாய் வற்றல் தூள், மிளகாய் வற்றல் பேஸ்ட், பிளேக்ஸ் மற்றும் சாஸ்;  போன்ற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிளகாய் உற்பத்தியில் நமது மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும்.  மேலும் விவசாயிகள் எளிதில் அழியக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேளாண் விளைபொருள் உற்பத்தியில் திறன் மிகுந்த விநியோக சங்கிலி தொடர் மேலாண்மையை செயல்படுத்துவதன் மூலம் அறுவடைக்குப்பின் விளைபொருளின் சேதாரத்தை குறைத்து விவசாயிகளுக்கு உரிய விலையும், தரமான பொருளை வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு தங்கள் செலவினத்திற்குரிய நிறைவையும் பெறச் செய்யலாம். இந்நோக்கோடு தமிழகத்தின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் ரூ. 398.75 கோடி மதிப்பீட்டில் “எளிதில் அழியக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான விநியோக சங்கிலி தொடர் மேலாண்மை” திட்டத்தை கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படுத்தபடுகிறது. இதன்படி மாவட்ட வாரியாக முக்கிய தோட்டக்கலை பயிர்கள் கண்டறியப்பட்டு மண்டல அளவில் அப்பயிர்களின் சாகுபடி, சுத்திகரிப்பு, மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை பற்றிய கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிளகாய் பயிரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.818 இலட்சம், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.524 இலட்சம் மற்றும் திருநெல்வேலி ரூ.593 இலட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
பச்சை மிளகாய் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், வரமிளகாய் (வத்தல்) உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் உள்ளது. இந்தியாவில் ஆந்திர, கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஒடிசா இராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆந்திராவின் குண்டூர் சந்தை ஆசியாவின் மிகப் பெரிய மிளகாய் சந்தையாகும். தமிழ்நாட்டின் மொத்த மிளகாய் உற்பத்தி 2939 மெ.டன்கள் 44610 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து பெறப்படுகிறது. தேசிய அளவில் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.4 சதவிகிதமாகும். மிளகாய் பயிர் இராமநாதபுரம் மாவட்டத்தில் 16150 ஹெக்டர்;, தூத்துக்குடி 11923 ஹெக்டேர், விருதுநகர் மாவட்டத்தில் 1392 ஹெக்டேர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 589 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது.
மேலும், இராமநாதபுரம் முண்டு மற்றும் சாத்தூர் சம்பா ஆகியவை தமிழ்நாட்டின் பராம்பரிய இரகங்களாகும். இவை முறையே இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துகுடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் இராமநாதபுரம் முண்டு இரகம் அதிக அளவில் பயரிடப்படுகிறது. சாத்தூர் சம்பா இரகத்தில் காரத்தன்மை காரணியான “காப்சைசின்” அளவு 0.24 சதவீதம் உள்ளது. இது இராமநாதபுரம் முண்டு இரகத்தின் “காப்சைசின்” (0.17 சதவீதம்) அளவை விட அதிகமாகும். இதனால் சாத்தூர் சம்பா இரகம் ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த ஒலியோரெசின் எனப்படும் மிளகாய் வற்றல் எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.  மிளகாய் வற்றலிருந்து பிரித்தெடுக்கும் ஒலியோரெசின் எண்ணெய் மதிப்புக்கூட்டுதல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு பொருட்களில் நிறமேற்றுவற்கும், சுவை மற்றும் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுகின்றது. இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஒலியோரெசின் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் விநியோகத் தொடர் மேலாண்மைத்திட்டம் முனைவர்.இளங்கோ அவர்கள் மிளகாய் மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் முனைவர்.வடிவேலு அவர்கள் கூட்டுப் பண்ணையத்தில் மிளகாய் மதிப்புக் கூட்டுதல் அவசியம் குறித்தும், கோயமுத்தூர் தோட்;டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர்.ஆறுமுகம் அவர்கள் மிளகாய் சாகுபடியில் இயற்கைப் பண்ணையம் பற்றியும், திருச்சி தோட்டக்கலைத்துறை பேராசிரியர் முனைவர்.செல்வம்;  அவர்கள் மிளகாய் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்தல் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். ஆகையால் விவசாயிகள் இந்த கருத்தரங்கினை நன்கு பயன்படுத்தி கொண்டு, மற்ற விவசாயிகளுக்கும் சம்பா மிளகாயை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி, விற்;பனை செய்தால்
ஏற்படும் நன்மைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை ஆணையர் திரு.ளு.து.சிரு,  கேட்டுக்கொண்டார்கள்.
முன்னதாக வேளாண்மை விற்பனை (ம) வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மைத் துறை, வேளாண் அறிவியல் மையம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மிளகாய் உற்பத்தியாளர்கள் நல சங்கம் போன்ற துறைகள் மூலமாக மிளகாய் வத்தலின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், மிளகாய் வத்தல் இரகங்கள், அலங்கார மிளகாய் கன்றுகள், மிளகாய் விதை இரகங்கள், பயிர்களில் என்னென்ன சத்து குறைபாட்டினால் என்னென்ன நோய்கள் ஏற்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய பதாகைகள், குழித்தட்டு நாற்று முறைகள் பற்றியும், சொட்டு நீர் பாசன முறை செயல் விளக்க திடல், பல்வேறு வகையான சிறுதானியங்கள் போன்றவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  திறந்து வைத்தார்கள்.
இக்கருத்தரங்கு நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர்கள்  சந்திரனேன் நாயர் (ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்), திரு.சுப்பிரமணியன் (வேளாண்மை), துணை பொது மேலாளர் (நபார்டு வங்கி)  .பாலசுப்பிரமணியம், துணை இயக்குநர்கள் திரு.கார்த்திகேயன் (வேளாண்மை), திரு.தமிழ்வேந்தன் (தோட்டக்கலை), அரசு அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
                  வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து