முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பறந்த சோயுஸ் எம்எஸ்- 6 ராக்கெட்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: மூன்று விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் எம்எஸ்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ரஷ்யாவிற்கு சொந்தமான சோயுஸ் எம்எஸ் -6 ராக்கெட்  கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மார்க் வாண்டே ஹீ மற்றும் ஜோ அகாபா ஆகிய 2 வீரர்களும், ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் மிஸ்ர்கின் என்ற விண்வெளி வீரரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

புவியியல் தன்மை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவற்றை கண்டறிவதற்காக சோயுஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான சர்வதேச அளவிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியே இந்த கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து