இடையப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட தேசிய மாணவர் பயிற்சி அகாடமியை கலெக்டர் வீரராகவராவ்பார்வையிட்டார்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      மதுரை
mdu news

 மதுரை.- மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியை 01.09.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அகாடமியில் பயிற்சி பெற்றுவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த பயிற்சி மாணவர் அகாடமியில் ஆயுத பாவிப்பு (றுநயிழn ளுiஅரடயவழசள)இ ஓட்டுநர் பாவிப்பு (னுசiஎiபெ ளுiஅரடயவழசள)இ ஆங்கில மொழி ஆய்வுக் கூடம், செயற்கை பாறை ஏறுதல் அமைப்பு (யுசவகைiஉயைட சுழஉம ஊடiஅடிiபெ) போன்ற வசதிகளையும் இப்பயிற்சி மையத்தில் நவீன தங்கும் விடுதி, துப்பாக்கி சுடும் தளம், அணிவகுப்பு மைதானம், உள்அரங்கம், உணவு உண்ணும் அறை, கலையரங்கம், உயர் அலுவலர்கள் தங்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, அகாடமி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

மேலும் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இடையப்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.


பின்னர் இடையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்குள்ள குழந்தைகளிடம் உரையாடினார். அதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் எதிர்புறம் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணியினை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பெனடிக் தர்மராய், மதுரை கிழக்கு வட்டாட்சியர் கருப்பையா, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகாந்தி, முருகன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து