தெலுங்கானாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் தெலுங்கு மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் முதல்வர் சந்திர சேகரராவ் எச்சரிக்கை

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      இந்தியா
chandrasekhar-rao 2017 09 13

ஐதராபாத்: தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது சந்திர சேகரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு மாநாடு
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் டிசம்பர் 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 5 நாட்கள் உலக தெலுங்கு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் சந்திர சேகரராவ் கலந்து கொண் டனர். அப்போது அவர் பேசியதாவது:

கட்டாயம் கற்பிக்க..
அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன பலகைகளும் தெலுங்கு மொழியிலேயே வைக்கப்பட வேண்டும்.  மக்கள் விரும்பும் பட்சத்தில் தெலுங்குடன் பிற மொழிகளிலும் பலகைகளை வைத்துக் கொள்ளலாம். தெலுங்கானாவில் உள்ள  அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும். தொடக்க கல்வி  முதல் மேல்நிலை கல்வி  வரை அனைத்து பாடங்களையும் தெலுங்கில் உருவாக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


முதல்வர் எச்சரிக்கை
தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு கல்வி நிறுவனமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் சந்திர சேகரராவ் எச்சரித்துள்ளார். தெலுங்கானாவில் சில பள்ளிகளில் தெலுங்குக்கு பதிலாக சிறப்பு ஆங்கிலம் கற்பிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் தெலுங்குக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து