கடலாடி கீழமுந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நடராஜன் வழங்கினார்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கீழமுந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்;.
 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கீழமுந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 163 பயனாளிகளுக்கு  ரூ.54.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார் அப்போது அவர் பேசியதாவது:- அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றிற்கு உடனடி தீர்வு காணும் விதமாக மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அதனடிப்;படையில்  கடலாடி வட்டம், கீழமுந்தல் கிராமத்தில் நடைபெறும் இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மொத்தம் 140 முன்மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 163 பயனாளிகளுக்கு  ரூ.54.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இதுதவிர, கீழமுந்தல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.6.63  லட்சம் மதிப்பீட்டில்  4 அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.  விரைவில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
 தற்போது கோடை காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கவுள்ளதால், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.  பொதுமக்கள் குடிநீரினை சுத்தமாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பதோடு பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திட வேண்டும்.  பயன்படுத்தப்படாத ரப்பர் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் உட்பட மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதற்கு வாய்ப்பாக உள்ள சூழல்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல மழை பெய்யும் நேரத்தில் மழைக்காக மரங்கள் அடியில் ஒதுங்கி நிற்பதை தவிர்த்திட வேண்டும். ஏனென்றால் இடி, மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும், மின்சார வயர்கள் மரங்களில் உரசி அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. 
   இதுதவிர, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்ணின் தன்மையை செறிவூட்டும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4586 நீர்நிலைகளில் உள்ள களிமண் படிமங்களை எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்யப்பட்டு, இதுவரை 28,500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 36 லட்சம் க்யுபிக் மீட்டர் அளவிற்கு வண்டல் களிமண் பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) அமிர்தலிங்கம், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணின், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், வட்டாட்சியர் கோபால் உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து