ஸ்ரீவி. கலசலிங்கம் தொழிற்நுட்பக்கல்லூரியில், அண்ணா பல்கலை மண்டல கால்பந்து போட்டி!

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      விருதுநகர்
vnr news

  விருதுநகர்.-ஸ்ரீவி.  கலசலிங்கம்  தொழிற்நுட்பக்கல்லூhயில்  அண்ணா  பல்கலைக்கழகத்தின் 18வது  மண்டல  ஆண்கள்  கால்பந்து  போட்டிகள்  2 நாட்கள் நடைபெற்றன.
மொத்தம் 19 கல்லூரிகளிலிருந்து  250 மாணவர்கள் கால்பந்துபோட்டிகளில் கலந்துகொண்டனர்.
2வது நாள் நடைபெற்ற போட்டியில்,  திருநெல்வேலி  அரசு பொறியியல்  கல்லூரி மாணவர்கள் 2கோல்கள் எடுத்து சேரன்மகாதேவி ஸ்கேடு பொறியியல்  கல்லூரி மாணவர்களுடன்  விளையாடி முதலிடம் பெற்றனர்.  ஸ்கேடு பொறியியல்  கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர்.திருச்செந்தூர்  டாக்டர்  சிவந்திஆதித்தனார்  பொறியியல் கல்லூரி மாணவர்கள் தூத்துக்குடி சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் அணியுடன் விளையாடி   2-0 கோல்கள் போட்டு மூன்றாவது இடத்தைப்பெற்றனர். 
வெற்றிபெற்ற  அணிகளுக்கு கல்லூரி  முதல்வர்  முனைவர் எஸ்.  ஹரிகிருஷ்ணன் மற்றும்  டீன் ஆர் அன்டு டி முனைவர் ஜி.  விஜயா ஆகியோர்   பரிசுகளை  வழங்கினர்.விளையாட்டு போட்டி ஏற்பர்டுகளை உடற்கல்வி  இயக்குநர்  கார்த்திகேயன்,  கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து