2 நாள் பயணமாக இந்தியா வருகை: ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு சிறப்பான வரவேற்பு

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      இந்தியா
japanese-pm-arrives-india 2017 9 13

அகமதாபாத் : குஜராத் மாநிலம் ஆகமதாபாத்துக்கு வந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்துக்கு நேற்று மதியம் வருகை தந்தார். நேற்று மாலை அகமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் இரு நாட்டு பிரதமர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்த ஜப்பான் பிரதமர் ஷ்ன்ஸோ அபேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி கட்டித்தழுவி வரவேற்றார். பின் அவருக்கு அளிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக, பிரதமர் மோடி ட்விட்டரில், உங்களை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் என்று ஜப்பான் பிரதமரை வரவேற்பதாக அந்நாட்டு மொழியில் பதிவிட்டிருந்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து