டோனியைப் போல் ஒரு பினிஷரைக் கண்டதில்லை: இலங்கை முன்னால் கேப்டன் அட்டப்பட்டு புகழாரம்

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      விளையாட்டு
attapattu 2017 09 13

கொழும்பு: கடந்த கால் நூற்றாண்டில் நான் டோனியைப் போல ஒரு வெற்றிகரமான பினிஷரைப் பார்த்ததில்லை என்று முன்னாள் இலங்கை கேப்டன் மர்வன் அட்டப்பட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.

கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்துக் கூறியதாவது:
முதலில் நான் டோனியின் பாகிஸ்தானுக்கு எதிரான சதத்தைப் பார்த்தேன் (148 ரன்கள், வைசாக், 5வது போட்டி). உள்ளபடியே கூற வேண்டுமெனில் ஒருவர் வந்து தன் வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை ஆடியதாகவே அந்த இன்னிங்ஸைப் பார்த்தேன்.
பிறகு மீண்டும் களத்தில் நேரடியாக எங்களுக்கு எதிராக ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் 183 ரன்கள் எடுத்ததைப் பார்த்தேன். அவரிடம் கிரிக்கெட் காப்பி புக் ஸ்டைல் கிடையாது. அவருடைய மனோவலிமை இதற்கும் மேலாக ஒரு போட்டியை கணிப்பது என்பதில் உலகில் அவருக்கு நிகர் யாரும் இல்லை, இந்தியாவை விட்டு விடுவோம்.

அவர் சூழ்நிலைக்கேற்ப ரிஸ்க் எடுத்து ஆடக்கூடியவர். கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் அவரைப்போல ஒரு பினிஷர் கிடையாது என்றே கூறுவேண். ஜாவேத் மியாண்டட், மைக்கேல் பெவன், அர்ஜுனா ரணதுங்கா ஆகியோரை நாம் குறிப்பிடலாம் ஆனால் இப்போது அவர் உள்ள இடம், அதுவும் காப்பு புக் பேட்டிங் உத்தி இல்லாமல் இத்தகைய உயர்வான இடத்துக்கு வந்துள்ளது பெரிய நிகழ்வு என்றே கூறுவேன்.


இவ்வாறு அட்டப்பட்டு கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து