முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

புதன்கிழமை, 13 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

பயிற்சி கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஆஸ்திரேலியா– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரு அணிகளிலும் 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது.

வார்னர் 64 ரன்
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹில்டன் கார்ட்ரைட் (0) ரன் எதுவுமின்றி வெளியேறினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று வலுவூட்டினர். துணை கேப்டன் டேவிட் வார்னர் (64 ரன், 48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்டீவன் சுமித் (55 ரன், 68 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் (65 ரன், 63 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தனர். இதற்கிடையே அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் (14 ரன்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா ஆகியோரின் பந்து வீச்சுக்கு மட்டுமே ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் தடுமாறினர். மற்றவர்களின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்டனர்.

ஆஸ்திரேலியா 347 ரன்
இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூஸ் வேட்டும் அதிரடி காட்டினர். இதன் பலனாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் 101 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.

ஸ்டோனிஸ் 76 ரன்களும் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மேத்யூ வேட் 45 ரன்களும் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

லெவன் அணி தோல்வி
தொடர்ந்து களம் புகுந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியில் திரிபாதி 7 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் ஆஸ்திரேலியாவின் ‘மெகா’ ஸ்கோரை நெருங்க முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ‘உள்ளூர் ஹீரோ’ வாஷிங்டன் சுந்தர் (11 ரன், 13 பந்து, 2 பவுண்டரி) பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். இதே போல் கேப்டன் குர்கீரத்சிங் மான் 27 ரன்களில் வீழ்ந்தார்.

முடிவில் வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 43 ரன்களும், மயங்க் அகர்வால் 42 ரன்களும், குஷாங் பட்டேல் 41 ரன்களும், அக்‌ஷய் கார்னிவர் 40 ரன்களும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து