முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி

வியாழக்கிழமை, 14 செப்டம்பர் 2017      தேனி
Image Unavailable

 தேனி.-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளிமான் கோம்பை ஊராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்; தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடாசலம்,  திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர். பொதுமக்கள்; தெரிவிக்கையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  சார்பில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது எனத்தெரிவித்தனர்.
     இந்நிகழ்வின்போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர்  பார்திபன்  பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (பொ)  தி.ரசிகலா  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  து.தங்கவேல்  ஆண்டிபட்டி வட்டாட்சியர்  சுந்தர்லால்  வட்டார வளர்ச்சி அலுவலர்  எபி  முன்னாள் பேரூராட்சித்தலைவர்  பால்பாண்டியன்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  அ.கதிரவன்  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)  அ.இளையேந்திரன்  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து