முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் ராணுவ தளமான குவாமை குறி வைத்து வடகொரியா ஏவுகணை சோதனை? ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

டோக்கியோ: வடகொரியா அமெரிக்க ராணுவ தளமான குவாம்மை குறி வைத்து புதிய ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கக் கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஐ. நா. விதித்த புதிய பொருளாதாரத் தடையையும் மீறி வடகொரியா மீண்டும் ஜப்பானுக்கு அப்பால் உள்ள பசிபிக் கடலில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏவுகணை சோதனை நடத்தியது.வடகொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை ஜப்பான் பொறுத்து கொண்டிருக்காது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸ்னோரி ஒனடேரா வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனை அமெரிக்காவின் ராணுவ தளமான குவாம்மை குறிவைத்து நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒனடோரா கூறும்போது, "வடகொரியா நேற்று  வடக்கு பசிபிக் பகுதியில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றிய அதன் உள் நோக்கத்தை நம்மால் கண்டறிய முடியாது. எனினும் அமெரிக்காவின் ராணுவ தளமான குவாம்மை குறிவைத்து இந்த சோதனையை வடகொரியா நடத்தியிருக்கலாம் என்றி நான் எண்ணுகிறேன்.

வடகொரியா நடத்திய அந்த ஏவுகணை 3,700 கிலோமீட்டர் பயணம் சென்று இலக்கை தாக்கக் கூடியது. அந்த ஏவுகணை ஏவப்பட்டது முதல் அது கடலில் மூழ்கியவதுவரை அதனை நாங்கள் கண்காணித்தோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து