முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கு விசாரணை நவாஸ் ஷெரீப்புக்கு சம்மன்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது பிள்ளைகள் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பனாமாவில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்வதாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணங்களில் தகவல் வெளியானது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
 
இதுதொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப் (67) பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேசிய நம்பகத்தன்மை ஆணையம் கடந்த வாரம் 4 வழக்குகளைப் பதிவு செய்தது.

இவற்றில் 2 ஊழல் வழக்குகளில் ஷெரீப், அவரது மகள் மரியம், மகன்கள் உசைன், ஹாசன், மருமகன் முகமது சப்தர் ஆகியோர் நீதிமன்றத்தில் வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இங்கிலாந்து நிறுவனங்களில் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகளவு முதலீடு செய்துள்ளது உட்பட 2 ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பனாமா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்றுமுன்தினம் தனது விசாரணையை தொடங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து