முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ‘சர்ச்சைக்குரிய’ ’ வடகிழக்குப் பகுதியில் ஜப்பான் முதலீடு: சீனா எதிர்ப்பு

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் ஜப்பான் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பது குறித்து ‘சர்ச்சைக்குரிய’ இப்பகுதியில் ஜப்பான் உட்பட அயல்நாட்டு முதலீடுகளை அனுமதிக்க முடியாது என்று சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, வடகிழக்கு மாநிலங்களில் ஜப்பான் முதலீடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறியதையடுத்து சீனா இப்பகுதியில் எந்த ஒரு அன்னிய முதலீட்டையும் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செயல் கிழக்குக் கொள்கை என்பதை நீங்களும் குறிப்பிட்டீர்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி முழுதும் வரம்பகற்றப்பட்ட பகுதியல்ல. எல்லையின் கிழக்குப் பிரிவில் எங்களுக்கிடையே சச்சரவுகள் உள்ளன. தற்போது இருதரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுக்காக பேச்சுவார்த்தைகள் நடத்த நாடியிருக்கிறோம். இத்தகைய சூழ்நிலையில் மற்றவர்களும் இந்தச் சூழலை மதித்து நடந்து கொள்ள வேண்டும் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் எங்கள் முயற்சியில் எந்த ஒரு மூன்றாம் நாட்டின் தலையீடும் இருத்தல் கூடாது.

உள்ளபடியே கூற வேண்டுமெனில் ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தை நெருக்கமாக கவனித்து வருகிறோம். இருநாட்டு பிரதமர்களும் அளித்த கூட்டறிகையை கவனமுடன் வாசித்தேன், ஆனால் அதில் சீனா என்ற வார்த்தையே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தியா-ஜப்பான் ஆகிய நாடுகள் ஆசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள். இந்த இருநாடுகளிடையே சுமுகமான நட்பு என்பது இப்பகுதியில் சமாதானத்துக்கும், அமைதிக்கும் வழிவகுக்கக் கூடியதே, அமைதித் தீர்வுக்கு இந்த இருநாட்டு நட்பு ஆக்கபூர்வ பங்களிப்பு செய்யும் என்றே நாம் நம்புகிறோம்.

இவ்வாறு கூறினார் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து