முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு திட்டமிட வேண்டும் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

சென்னை : 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு தனியாக திட்டமிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் 125 வது ஆண்டு விழாவில், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் எனக்கு தொடர்பு இருந்தது. அவர் சார்பில் தான் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறேன். வழக்குகளைப் பற்றி பேசும்போது, தனது தரப்பு கருத்துகளை அவர் சிறப்பாக எடுத்துரைப்பார். நான் ஒருமுறை அவரிடம், உங்களுக்கு நல்ல சட்ட அறிவு இருக்கிறது என்றேன். அதற்கு அவர், நான் வழக்கறிஞர் தொழிலுக்கு வராததற்காக வருத்தப்படுகிறேன் என்றார். மேலும், தனது தரப்பு வழக்குகளை தயார் செய்வதன் மூலம் அதனை ஈடு செய்து கொள்கிறேன். அப்படிபட்ட திறமையான ஜெயலலிதா மறைந்துவிட்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை இந்த நேரத்தில் தான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 31.12.16 வரையிலான வழக்குகளின் நிலை குறித்த குறிப்புகளைப் படித்தேன். அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 லட்சத்து 97 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் 10 லட்சத்து 99 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 33 ஆயிரத்து 960 மும், மாவட்ட நீதிமன்றங்களில் 44 ஆயிரத்து 721 என உள்ளது.

இந்நிகழ்ச்சியின் மூலம் தான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு தனியாக திட்டமிட வேண்டும். அந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவில்லை. 3 மற்றும் 4 சதவீதத்துக்குள் தான் உள்ளது. அதை மற்ற சில உயர்நீதிமன்றங்கள் செய்து முடித்துள்ளன. நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.இது குறித்தும் முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அரசுத் தரப்பு வழக்குகள் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இதற்காக நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வழக்குகளை தீர்த்து வைப்பதற்காக நியாய மித்ரா என்ற புதுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து