முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு: வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை - அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவை சீண்டினால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த 3-ம் தேதி வடகொரியா ஹைட்ஜரன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியில் சீறிப் பாய்ந்து கடலில் விழுந்தது. இது 2,300 மைல் தொலைவை 19 நிமிடங்களில் கடந்தது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் குவாம் தீவை எங்களால் அழிக்க முடியும் என்று வடகொரியா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் வானில் பறந்தால் எதிரி நாடுகள் அஞ்சி நடுநடுங்கும். நட்பு நாடுகள் உற்சாகம் கொள்ளும். - அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்நிலையில் அமெரிக்க விமானப் படையின் 70-வது ஆண்டு விழாவையொட்டி அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்  மேரிலேண்ட் மாகாணம், பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-2 போர் விமானம் முன்பாக நின்று விமான படை வீரர்கள் மத்தியில் அவர் பேசினார். அவர் கூறியதாவது:

அமெரிக்க போர் விமானங்கள் வானில் பறந்தால் எதிரி நாடுகள் அஞ்சி நடுநடுங்கும். நட்பு நாடுகள் உற்சாகம் கொள்ளும். அமெரிக்காவை சீண்டினால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். வடகொரியாவின் நடவடிக்கைகள் உலக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எங்களது பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.  இவ்வாறு அவர் பேசினார்.
வடகொரியா மிரட்டல்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேற்று கூறியதாவது:

அணு ஆயுத, ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியாவின் ராணுவ பலம் அதிகரித்துள்ளது. இனிவரும் காலங்களிலும் அணு ஆயுத சோதனைகள் தொடரும்.  வடகொரியா மீது அடுக்கடுக்கான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. எத்தனை தடைகள் போட்டாலும் எங்களது அணு ஆயுத இலக்குகளை எட்டுவோம். அமெரிக்க ராணுவத்துக்கு இணையாக வடகொரியாவின் ராணுவ பலம் அதிகரிக்கப்படும். இதன்மூலம் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பேசும் துணிச்சல் அமெரிக்காவுக்கு வராது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து