முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தை ஒவ்வொரு பொறியியல் மாணவரும் படிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தை ஒவ்வொரு பொறியியல் மாணவரும் படிக்க  வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நர்மதா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார். பின்னர் அணையிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் தாபோய் எனும் நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். தாபோய் நகரத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

உலக வங்கியின் உதவி இன்றி, எங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த சர்தார் சரோவர் அணையின் கட்டுமானத்தை நாங்கள் நிறைவு செய்தோம் - பிரதமர் மோடி

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் பேசியதாவது:

நர்மதா அணையைப் போல ஏராளமான தடைகளை எதிர்கொண்ட திட்டம் உலகில் வேறெங்குமில்லை. இத்திட்டத்தை  பாதியில் நிறுத்தவேண்டும் என்றுதான் பலரும் விரும்பினார்கள். ஆனால் இத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது என நாங்கள் தீர்மானித்தோம். சர்தார் சரோவர் அணை புதிய மற்றும் வளர்ந்துவரும் சக்தியாக மற்றும் இந்த பிராந்தியத்தில் வளர்ச்சியை ஊருக்குவிப்பதாக அமையப் போகிறது. இந்த திட்டம் ஒரு பொறியியல் அதிசயம்.

எங்கள் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டன. இந்த திட்டத்தை நிறுத்த பலரும் சதி திட்டம் தீட்டினர். ஆனால் இதை அரசியல் சண்டையாக உருவாக்க வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்தோம்.

இந்த திட்டத்தைத் நிறுத்த முயன்றவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நானும் அவர்கள் செய்ததுபோன்ற ஒரு செயலாக அவர்கள் வழியில் சென்று அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அணையை கட்டும்போது இத்திட்டத்திற்கு எதிராக பெரிய அளவில் தவறான தகவல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதனால் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட உலக வங்கி, கடன் கொடுக்க மறுத்து, சுற்றுச்சூழல் கவலையை உயர்த்தியது. ஆனால், உலக வங்கியின் உதவி இன்றி, எங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த பெரிய திட்டத்தை நாங்கள் நிறைவு செய்தோம்.  அற்புதமான இந்த அணையின் கட்டுமானத்தை ஒவ்வொரு பொறியியல் மாணவரும் படிக்க வேண்டும்.

இங்கு ஏற்பட்ட நீர் பற்றாக்குறை வளர்ச்சி வேகத்தை குறைப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இனி அந்தப் பிரச்சினையில்லை. குஜராத்தின் இந்திய பாக். எல்லையில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கான நீர்த் தேவைகளை அணையிலிருந்து இந்த திட்டத்தின்மூலம் கொண்டுசெல்ல முடியும்.

அதேசமயம் குஜராத், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் நீர் பாசனத்திற்கும் போதுமான நீரை வழங்கமுடியும். இந்த அணை  1960கள்  அல்லது1970களில் நிறைவேற்றப்பட்டிருந்தால் பொருளாதாரம் உயர்ந்திருக்கும். வெள்ளத்தால் ஏற்பட்ட கடும்வறட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.  இந்த நேரத்தில் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் உருவாக உறுதுணையாக இருந்த அன்றைய மத்திய அமைச்சர்களான சர்தார் வல்லபாய் படேலுக்கும் பி.ஆர்.அம்பேத்கருக்கும் எனது நன்றி மிக்க அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன். இரு தலைவர்களும் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.

எனது பிறந்த நாளில் இந்த அணை அர்ப்பணிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மஹாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சர்தார் சரோவர் அணை 56 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.  ஆனால் பல்வேறு சர்ச்சைகளில் மூழ்கியது. பாதிக்கப்பட்ட கிராமவாசிகளுக்கு ஆதரவாக கடுமையாக எதிர்ப்பை சந்தித்தது. நேற்று காலை பிரதமர் மோடியால் இந்த அணை திறந்துவைக்கப்பட்டுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து