முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுவையில் பரவலாக மழை

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  நேற்று  தமிழகத்தின்  பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்'' என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து