முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய ஓபன் பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி, டெண்டுல்கர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி :  கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அவருக்குபிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 தென் கொரிய தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது., நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து  ஜப்பான் வீராங்கனையும் உலக சாம்பியனுமான நோசோமி ஒகுஹாராவுடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பி.வி.சிந்து அதிரடியாக ஆடி 22-20, 11-21,  20-18  செட் கணக்கில்   நோசோமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 23 நிமிடம் வரை நீடித்தது.

அவரது அதிரடி வெற்றியை பாராட்டி பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.  கொரிய ஓபனில் வென்று இந்தியா பெருமிதம் அடைய  செய்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங் ராத்தோர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் கொரிய ஓபனில் மிகச்சிறப்பான ஆட்டம் ஆடி வெற்றி தேடி தந்துள்ளீர்கள். உங்களால் இந்தியா பெருமிதம் அடைகிறது. வரவிருக்கும் போட்டிகளிலும்  வெற்றிகளை குவிப்பீர்களாக. இவ்வாறு அமைச்சர் ராஜ்ய வர்தன் ராத்தோர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  இந்தியாவுக்கு ஈர்ப்புச்சக்தியாக உள்ளீர்கள் என தெரிவித்துள்ளார். இதேப்போன்று கிரிக் கெட் வீரர் சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ஆகியோரும்  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து