முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் 67-வது பிறந்தநாள்: கவர்னர் - முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் 67-வது பிறந்தநாளையொட்டி தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடியின்  பிறந்தநாளையொட்டி கவர்னர் சி.எச். வித்யாசாகர் ராவ் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உங்களது பிறந்த நாளையொட்டி எனது இதயம் கவர்ந்த வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  உங்களது திறமை கோட்பாடுமிக்க அணுகு முறை, மக்களின் நலன் சார்ந்த திறமைமிகு திட்டங்கள் இந்தியாவை சர்வதேச வரைபடத்தில் இடம் பெறச்செய்துள்ளது. உங்களது தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டங்கள் நாட்டை வலுப்படுத்தும். உள்நாட்டு உற்பத்தியை சர்வதேச சந்தையில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடனும், உடல் நலத்துடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

உங்களது மகிழ்ச்சியான பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலம் மற்றும் பலத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் 

 இந்த நாட்டுக்கு சேவைபுரிய நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை பெற்றிட வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து