முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் எந்த பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார்,. அப்போது அவர் பேசியதாவது:
தாய் சேய் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அரசு,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் ஆகிய சிறப்பான திட்டங்களை செயலாற்றி வருகிறது.இந்த வரிசையில், இந்திய அளவில் தடுப்பு மருந்துகளால் தடுக்கக்கூடிய 9 வகையான நோய்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக, தமிழகத்திலிருந்து போலியோ, பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உலக சுகாதார   நிறுவனத்தின் விருதினை அரசு பெற்றுள்ளது. அதேபோல், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி வழங்குவதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகிக்கின்றது என்று உலக சுகாதார நிறுவனத்தால் அரசு பாராட்டைப் பெற்றுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தொடர்ந்து தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் எந்த ஒரு பச்சிளம் குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன், செயல்படும் இந்த அரசால், ரோட்டா வைரஸ் தடுப்புசொட்டு மருந்து வழங்கும் திட்டத்தினை நான் சேலத்தில் தொடங்கி வைத்துள்ளேன். இந்த அரிய வாய்ப்பினை, தாய்மார்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளை வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக தடுத்து, ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவற்றில், பல அற்புதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் காரணத்தினாலே, தமிழகத்தில் தாயினுடைய இறப்பு சதவீதம், அதன் பின் பிறக்கின்ற குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைந்து, இந்திய அளவிலே மிக, மிகக் குறைந்த இறப்பு சதவீதம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இதற்குக் காரணம் சுகாதாரத்துறை செய்துள்ள பல்வேறு மாற்றங்களின் காரணமாக, இன்றைக்கு இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல பல நடவடிக்கைகளின் காரணமாக, தொடர்ந்து நடவடிக்கைஎடுக்கப்பட்டு, ஏழை, எளிய தாய்மார்களை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது, குழந்தையை பெற்ற தாயும், குழந்தைகளும் எந்தவிதத்திலும் பாதிப்பு அடையக்கூடாது என்பதில் இன்றைக்கு அரசு கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறது. ஆகவே பொது மக்கள் இந்த நல்ல நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு சிறப்படைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் அமைச்சர்கள்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்.ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரகவளர்ச்சித்துறை இயக்குநர்.பாஸ்கரன்சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹினி ரா.பாஜிபாகரே, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்து இயக்குநர்.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்துறைஇயக்குநர் (ஈ.எஸ்.ஐ) இன்பசேகரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்)வளர்மதி,துணைஇயக்குநர்(சுகாதாரப்பணிகள்).பூங்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து