முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் தேசிய நினைவகம் பகுதியிலிருந்து சுவச்தா ஹே சேவா தூய்மையே சேவை விழிப்புணா்வு ரதம் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை பாரத
இயக்கம் என்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்  முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சுவச்தா ஹே சேவா  தூய்மையே சேவை
விழிப்புணா்வு ரதத்தை ராமேசுவரம் அருகே அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம் பகுதியிலிருந்து மத்திய இணை அமைச்சர் கொடி அசைத்து நேற்று   துவக்கி வைத்தார்.
  இராமேசுவரம் அருகே பேய்க்கரும் பகுதியில் அமைந்துள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  தேசிய நினைவகம் அருகே  தமிழ்நாடுஅரசு ஊரக வளா்ச்சித் துறையின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட சுவச்தா ஹே சேவா -தூய்மையே சேவை -
விழிப்புணா்வு ரதம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணைஅமைச்ச்சர் ஸ்ரீமதி.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்து பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்பாடு குறித்தும் திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுதலை ஊக்குவித்தல் வகையிலும் கூடிய வாசகங்களை கொண்ட விழிப்புணர்வுவை ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு  ரதத்தினை கொடியசைத்து  துவக்கி வைத்தார்.அதன் பின்னர் தங்கச்சிமடம்  ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலதீர்த்தம் பகுதியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது.இப்பணியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கலந்துகொண்டு அப்பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை இயக்குநர் தண்டபாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி,மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் சமீரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்)
.செல்லத்துரை,  மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன்,தங்கச்சிமடம் உராட்சி செயலர் கதிரேசன்,ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.கட்சியின்  தலைவர் முரளிதரன்,ராமேசுவரம் பாரதிய ஜனதா கட்சியின் நகர் தலைவர் ஸ்ரீதர் உள்பட அனைத்து துறை அலுவலர்களும், பணியாளர்களும், மகளிர் குழு அமைப்புகளும் கலந்து கொண்டனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து